திரையிசையில் உன் பெயர் ஒலித்தால் என் காதுகள் மீண்டும் மீண்டும் எதிரொலிக்கும் விளம்பரத்தில் உன் பெயர் உச்சரிக்கப் பட்டால் நச்சரிக்கும் என் காதுகள். பெயர் என்ன அடையாளக் குறியீடு மட்டுமா? உயிர் உறையும் உன்னதம் அந்த ஒற்றைச் சொல்லில் ஒரு உலகமே அடங்கிக் கிடக்கின்றது. ஆம் என் ஆன்மா உன் பெயரைக் கேட்டால் தான் உயிர்த் துடிப்போடு