Tuesday, December 8, 2009

நினைத்தேன் வந்தாய்

உன்
அலுவலகத்தைக் கடக்கும்போது
நீ
வெளியே வரமாட்டாயா?
என
ஏங்கியது நெஞ்சம்.

ஆனாலும்
வண்டி மட்டுமே
கடந்து சென்றது
சில மில்லிமீட்டர் தூரம்.

அதிசயம்
ஆனால் உண்மை
என்னை முந்திக்கொண்டு
உன் முந்தானை
பறந்து சென்றது.

காதலால் கசிந்து
கண்களைத் தொலைத்து
நின்றேன்.

1 comment:

  1. ரொம்ப நல்ல இருக்கே இது முந்தானை பறந்து செல்வது

    அருமை பாலா

    ReplyDelete