Tuesday, November 24, 2009

தீவிரவாதம்

நீ
என்னைப் பார்த்ததில்
என் கண்கள்
அளவு கடந்த ஓளிப் பிழம்பால்
ஒரு கணம் இருண்டு போயின.
நெடுஞ்சாலை ஒன்றில்
நள்ளிரவில்
கனரக வாகன வெளிச்சத்தில்
பாதை மறைக்கப் பட்ட
இருசக்கர வாகனமாய் நான்.
ஒளி வெள்ளத்தை உதிர்த்த
அதே விழிகள்
பின்னாளில்
குளுமையைக் கொட்டிக் கொடுக்கத்
தவறவில்லை.
இப்போதெல்லாம்
மின்சாரம் மறந்த
கிராமத்து
தெருவிளக்காய் நான்

Monday, November 23, 2009

பேரூந்து

பேருந்தில்
நீ ஏறிப் போவதைப்
பார்த்தால்
நானோ
சீருந்தாய் ஓட்டிடுவேன்
சைக்கிளைப் பின் தொடர்ந்து
சன்னலில் பார்த்து
நீ சிரித்தால்
சிலை நான்

Friday, November 6, 2009

கோள்கள்


சூரியனைச் சுற்றி

ஒண்பது கோள்கள்

ஆனால்

உன்னைச் சுற்றி

ஒரே ஒரு கோள்

மழை


அடைமழைக் குளிரில்


ஆடுகிறது தேகம்


அன்றொரு நாள்


பல


கொண்டை ஊசி


வளைவுகளைக் கடந்து


கொடைக்கானல் பயணித்தோம்


அனைவரும்


நடுங்கி கம்பளிக்குள் ஒடுங்கிட


நான் மட்டும்


உன் மூச்சுக் காற்றின்


கதகதப்பில் வியர்த்திருந்தேனே?

Wednesday, November 4, 2009

ஊஞ்சல்


மழைக்கால வானத்தில்

மந்திர ஜால வண்ணங்கள்

வானவில் ஊஞ்சலில்

வசதியாய் அமர்ந்து

கானக் குயில் போல்

கரும்பின் இனிமை யான

குரலெடுத்து பாடுகின்றாய்.

மகுடிக்கு மயங்கிய பாம்பென

மயங்கித் தவிக்கிறேன்.

தவிப்பில் நகர்கிறது நாட்கள்.

மனதையும் ஆட்டிவிட்டு

மஞ்சள் வெய்யிலில்

ஓயாமல் ஆடுகிறது ஊஞ்சல்


பாதை


இனியவளே

கம்பன் உன்னைக் கண்டிருந்தால்

சீதையைப் பாடாமல்

உன்

பாதையைப் பாடியிருப்பான்.


புத்தன் கூட,

உன்னைக் கண்டிருந்தால்

போதிமரத்திலும்

கட்டில் தான் செய்திருப்பான்.

Monday, November 2, 2009

விழி


பாதைகள் எல்லாம்

பயணத்தை தொலைத்து

உன்

நயனத்தின் ஈர்ப்பு விசைக்கு

இலக்காகி விடுகின்றன.


புவி ஈர்ப்பு விசை படித்திருக்கிறேன்

உன்

விழியீர்ப்பு விசையில் அகப்பட்டு

அவதியுறுகிறேன்.


கண்களின் கதிர்வீச்சில்

காயப்பட்டு கிடக்கிறது

காயம்.


எனது விழித்திரையில்

உனது அழகு

விழாக்கோலம் ஆனது.






Sunday, November 1, 2009

பார்வை


உன்

பார்வை வெளிச்சம்

இரவை பகலாக்கியது.


காதல்

கண்ணில்லாது

இருந்த எனக்கு

பார்வை வழங்கியது.


என் விழிகள்

உன் பார்வை வெளிச்சத்தில்

ஒரு புதிய

உலகத்தை கண்டு மகிழ்ந்தன.


விழிகளுக்குள்

விரிந்த திரைப்படம்

என்னை விழுங்கியது.


என் பார்வை தொலைந்து

உன் காட்சிகளே

எனக்குமாயின.