Saturday, April 10, 2010

கானல்


விருந்தொன்றில்
நீ
என் விருந்தானாய்.

உள்ளே நுழைகையில்
ஆயிரம் பார்வைகளில்
உன்
ஆடும் விழிகள்
என்னை
ஆட்கொண்டுவிட்டன.

கறி சோறு உண்பதைவிட
உன்
ஓரவிழி தரிசனம்
எனக்கு கிடைத்த ஆஸ்கார்.

கைக்கு கிட்டியது
வாய்க்கு எட்டாத நிலையில்
விருந்து
மருந்தானது.

உண்டு முடித்ததும்
உன்னோடு பகிர்வு
நான் அழைத்தேன்..
நானுந்தான்..

நண்பர்களுக்குப் புரியவில்லை
நம்முடைய உரையாடல்
உள்ளுறை பொருளாக
உள்ளத்துள்.

பரந்த உள்ளமுள்ள
எனக்கு
திறந்துவிடவில்லை
உன்
உள்ளக் கதவு.

அறிந்தும் அறியாமல்
புரிந்தும் புரியாமல்
நிரந்தரமானது காதல்.

Friday, February 19, 2010

அலைபேசி


அலைபேசியில்
உன்னை அழைத்தேன்
அலைபாயும்
என் மனத்துக்கு ஆறுதலாக
உன்
வளையோசைக் கேட்டது.

'எப்படி இருக்கீங்க?'
முந்திக்கொண்டது
உன்
மென்மை.
நன்றாய் இருப்பதாய்
நானுந்தான் சொல்லிவைத்தேன்.

'பிள்ளைகள் எப்படி இருக்கிறார்கள்'?
தாய்மையின் கரிசனத்தோடு
தவறாமல் கேட்டாய்.

நன்றாகப் படிப்பதாய்
நான் பதிலுரைக்க
நான் ஏனழைத்தேன்
என
நீ வினவினாய்.

உன்னோடு பேச
உன் குரலைக் கேட்க
என்னை உயிர்ப்பிக்க.

தொண்டைக்குள்
சிக்கிய முள்ளாய்
விடையிருக்க.

நேரில் சந்திப்பதாய்
நிறுத்தினேன் அலைபேசியை.

அலைமகள் உந்தன்
ஆனந்த கீதம்
அப்படியே
செவியிலும் மெய்யிலும்

Sunday, January 3, 2010

மடி


உன்னைப் பார்த்து
ஆனது சில நாட்கள்
எப்படியாவது சந்திப்பு
நிகழ்ந்துவிடும்

அப்படியொன்றும்
நடக்கவில்லை சமீபத்தில்
ஏனென்றும் தெரியவில்லை
எதற்கென்றும் புரியவில்லை.

வலிய வந்து
உன்னைப் பார்க்கவும்
முடிவதில்லை.

கரையைத் தொடும்
அலைகளாகவே
என் நினைவுகள்
எப்போதும் உன் காலடியில்.

உன்னைப் பற்றிய நினைவுகளும்
உன் சார்ந்த நிஜங்களும்
என்னை எப்போதும் கலவரமூட்டுகின்றன.

ஆனால்
என் மனம் மட்டும்
எப்போதும் உன்
மடியிலேயேக் கிடக்கிறது.

Tuesday, December 15, 2009

விருந்து


வேண்டிய
பொழுதினில்
விருந்தாவேன்

வெறுத்திடும்
வேளையில்
வேம்பாவேன்


தூண்டியே உணர்வினைத்
துடிக்க வைப்பாய்



துயிலவும் விடாமல்
துரத்திடுவாய்

நண்பனின் வேதனைப்
புரியலயா?

அன்பினை அடைத்து
வைப்பதுவா?

ஆவியை நிறுத்தத்
துடிப்பதுவா?

Tuesday, December 8, 2009

நினைத்தேன் வந்தாய்

உன்
அலுவலகத்தைக் கடக்கும்போது
நீ
வெளியே வரமாட்டாயா?
என
ஏங்கியது நெஞ்சம்.

ஆனாலும்
வண்டி மட்டுமே
கடந்து சென்றது
சில மில்லிமீட்டர் தூரம்.

அதிசயம்
ஆனால் உண்மை
என்னை முந்திக்கொண்டு
உன் முந்தானை
பறந்து சென்றது.

காதலால் கசிந்து
கண்களைத் தொலைத்து
நின்றேன்.

Wednesday, December 2, 2009

காதல் தேசம்


நம்

காதல் தேசத்தில்

உன்

வார்த்தைகள் தான்

தேசியகீதம்


உன்

கூந்தல் அசைவுகள் தான்

தேசியக்கொடி


உன்

மௌனம் தான்

கொள்கை முழக்கம்

Tuesday, December 1, 2009

பேராசை

திரையிசையில்
உன் பெயர்
ஒலித்தால்
என் காதுகள்
மீண்டும் மீண்டும்
எதிரொலிக்கும்

விளம்பரத்தில்
உன் பெயர்
உச்சரிக்கப் பட்டால்
நச்சரிக்கும்
என் காதுகள்.

பெயர் என்ன
அடையாளக் குறியீடு மட்டுமா?
உயிர் உறையும் உன்னதம்

அந்த
ஒற்றைச் சொல்லில்
ஒரு உலகமே அடங்கிக் கிடக்கின்றது.

ஆம்
என் ஆன்மா
உன் பெயரைக் கேட்டால் தான்
உயிர்த் துடிப்போடு