நீ நடந்து வருகையிலே நிலமகளும் நாணும்
உடன்தொடரும் தென்றலும் உன் மென்மையிலே மயங்கும்கவிதொடுத்து படிக்கையிலே கலையரங்கம் ஏங்கும்
கருத்து உவமை இனிமை கண்டு
கைத்தட்டி இரசிக்கும்
காதலோடு பாடும்போது கனிந்து மனது உருகும்
காரி உமிழ்வாய் சமூக அவலம் அவை கண்ணம் தொட்டு பார்க்கும்
எதிலும் பொறுமை நிதானம் உந்தன் இத்தனை உயரவெற்றி
எடுத்த செயலை முடிப்பதுதான் உனக்கு இத்தனை பெற்றி
கடுஞ்சொல் ஒன்றும் சொல்லாத கவிதைக்காரி நீயே
காலமெல்லாம் காதில் ஒலிக்கும் கவிதை நெய்வாய் தாயே
கேட்டு கேட்டு கிறுகிறுப்பேன் மழலைமொழியைப் போலே
கிளர்ந்து எழும் உணர்வுகளின் இருப்பிடமும் நீயே !
கவிதை உறவு நமக்குள் புகுந்து காதலாகி மலர
கமுக்கமாய் தொடருதம்மா கன்னித் தீவைப்போல
வாழ்வாங்கு வாழ்க நீயும் வண்டமிழைப்போல
ஏழேழு பிறவியிலும் தொடரும் இந்த உறவு
கவிதைக்காரி வாழ்க !காலம் வென்று வாழ்க !
No comments:
Post a Comment