அலைபேசியில்
உன்னை அழைத்தேன்
அலைபாயும்
என் மனத்துக்கு ஆறுதலாக
உன்
வளையோசைக் கேட்டது.
'எப்படி இருக்கீங்க?'
முந்திக்கொண்டது
உன்
மென்மை.
நன்றாய் இருப்பதாய்
நானுந்தான் சொல்லிவைத்தேன்.
'பிள்ளைகள் எப்படி இருக்கிறார்கள்'?
தாய்மையின் கரிசனத்தோடு
தவறாமல் கேட்டாய்.
நன்றாகப் படிப்பதாய்
நான் பதிலுரைக்க
நான் ஏனழைத்தேன்
என
நீ வினவினாய்.
உன்னோடு பேச
உன் குரலைக் கேட்க
என்னை உயிர்ப்பிக்க.
தொண்டைக்குள்
சிக்கிய முள்ளாய்
விடையிருக்க.
நேரில் சந்திப்பதாய்
நிறுத்தினேன் அலைபேசியை.
அலைமகள் உந்தன்
ஆனந்த கீதம்
அப்படியே
செவியிலும் மெய்யிலும்
அட யாரு பாலா இது நல்லாருக்கு கவிதை
ReplyDeleteகல்லூரிக் காலமுதல் என் கவிதையின் கருப்பொருள் .உயிரின் உருப்பொருள்
ReplyDelete